நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அதிகபட்சமாக 104 எம்.எல்.ஏ-க்களைப் பெற்ற பா.ஜ.க-வை ஆட்சியமைக்க கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார்.

 

ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், 'எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்பதற்குத் தடைவிதிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதனைத் தொடர்ந்து கர்நாடகாவின் 23-வது முதல்வராக எடியூரப்பா இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை, எடியூரப்பா மட்டுமே பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS