"இவர் தான் இந்தியாவின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்"...புகழ்ந்து தள்ளிய 'தாதா கங்குலி'!
Home > தமிழ் newsஇந்திய கிரிக்கெட் அணியில் கடந்த பத்தாண்டுகளில் வந்த விக்கெட் கீப்பர்களில் சிறந்தவர் விருத்திமன் சாகா என முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு,டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு தேர்வு குழுவின் முதல் சாய்ஸாக இருந்தவர் விருத்திமன் சாகா.இவர் விக்கெட் கீப்பிங் மட்டுமல்லாது பேட்டிங் செய்வதிலும் கலக்கி வந்தார்.இந்நிலையில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து தற்போது ஓய்வில் இருக்கிறார்.
இந்நிலையில் பிரபல பிரபல பத்திரிகையாளர் கவுதம் பட்டாச்சார்யா எழுதிய 'விக்கி' என்ற விளையாட்டு தொடர்பான புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய கங்குலி "கடந்த 5- 10 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் சகா மட்டுமே.அவர் விக்கெட் கீப்பர் மட்டுமல்ல,சிறந்த பேட்ஸ்மேனாகவும் தன்னை நிரூபித்து இருக்கிறார்.32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1164 ரன்களை சேர்த்துள்ளார்.இதில் 3 சதங்களும் அடக்கம்.
மேலும் வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் தான்.அதிலும் விக்கெட் கீப்பிங்கில் ஈடுபடுவோருக்கு,உறுதியாக காயம் ஏற்படாது என கூற இயலாது.எனவே அவர் காயம் காரணமாக ஓய்வில் இருந்தாலும்,அவர் விரைவில் மீண்டு வந்து அணியில் இடம் பிடிப்பார்'' என சவுரவ் கங்குலி தெரிவித்தார்