’#MeToo தளம் பெண்களுக்கு சாதகமான சூழலை உண்டாக்குகிறது; ஆனால்..’ : ரஜினி பதில்!
Home > தமிழ் newsவெளிநாட்டில் தொடங்கி, வட மாநிலம் வந்து பின்னர் தமிழகத்தில், குறிப்பாக தமிழ்த் திரைத் துறையில் மீடூ விவகாரம் சூடுபிடித்தது. தொடர்ச்சியாக பிரபலங்கள் பலர் மீது குற்றச் சாட்டுகள் எழுந்தன. பல்வேறு பெண்கள் அன்று முதல் இன்று வரை தத்தம் பாலருக்கு நிகழ்கிற, பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்களை வெளிப்படையாக சமூக வலைதளங்களில் #MeToo என்கிற ஃபோரம் அல்லது ஹேஷ்டேகின் கீழ் குறிப்பிட்டு வருகின்றனர்.
எனினும் குற்றம் சாட்டப்பட்ட பலரும் ஆதாரமற்று இருப்பதால் இக்குற்றங்களை புறக்கணிக்கவும், மறுப்பு தெரிவிக்கவும், அவதூறு வழக்கு தொடரவும் செய்கின்றனர். இந்த நிலையில் பேட்ட திரைப்பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியவர், விமான நிலையத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்திடம் இவை குறித்த கேள்விகள் கேட்ப்பட்டன.
மீடூ விவகாரங்களில் தொடர்ச்சியான பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறிய ரஜினிகாந்த், ‘பெண்களுக்கு சாதகமானதாக இருப்பதாக தெரிவித்தார். எனினும் இந்த மீடூ தளத்தின் மூலம் தங்கள் உரிமைகளை பேசும் பொருட்டு இதுபோன்ற தளங்களை பெண்கள் தவறுதலாக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது’என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.