நாயுடன் பஸ்ஸில் ஏறுன இந்த பெண்ணுக்கு நடந்தது மாதிரி எங்கயுமே நடக்காது!
Home > தமிழ் newsபெரும்பாலான நாடுகளில் பயணிகளுக்கான முறையான பயண அனுபவத்தை, பயணிகளின் விருப்பப்படி அளிப்பதே சரி என்கிற காரணத்தால் செல்லப் பிராணிகளை தங்களுடன் அழைத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில், பிரிட்டனின் சவுத் வேல்ஸ் புறநகர் அரசுப் பேருந்தில் வளர்ப்பு நாயுடன் ஏறிய பயணி ஒருவருக்கு டிக்கெட் போடும்போது, அவரது வளர்ப்பு நாய்க்கும் சேர்த்து டிக்கெட் போடப்பட்டுள்ள விஷயம் இணையத்தில் பரவி வருகிறது. சவுத் வேல்ஸின் ஸ்டேஜ் கோச் பேருந்து நடத்துநர், தனது செல்லப் பிராணியான, வளர்ப்பு நாயுடன் பேருந்தில் ஏறிய 29 வயதான ஹெய்டி லூயிஸ் என்கிற பெண் பயணி ஒருவருக்கு டிக்கெட் போடும்போது, அவருடைய வளர்ப்பு நாய்க்கும் டிக்கெட் போட்டு, ரசீதை கொடுத்துள்ளார்.
பிரஞ்சு புல்-வகை நாய்கள் இனத்தைச் சேர்ந்த அந்த 7 மாத வளர்ப்பு நாயினை, எத்தனையோ முறை பேருந்துகளில் அழைத்துச் சென்ற ஹெய்டி தனது வளர்ப்பு நாய்க்கு முதல்முறையாக இந்த பேருந்து கண்டக்டர் டிக்கெட் போட்டுள்ளதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் கண்டக்டரிடம் ’சரி டிக்கட்டை காண்பியுங்கள்’ என்று கேட்டுள்ளார். அவரும் நாய்க்கு டிக்கெட் போட்டதற்கான ரசீதை ஹெய்டியிடம் கொடுத்திருக்கிறார்.
அதில் பேருந்து புறப்பட்ட பஸ் ஸ்டாப், சென்று சேர வேண்டிய இட விபரம், கட்டண விபரம், நேரம், தேதி உள்ளிட்டவை பதிவாகியிருந்ததோடு நாய்-டிக்கெட் (Dog Ticket) என்று, டிக்கெட்டின் மேல் பகுதியில் எழுதப்பட்டிருந்ததையும் பார்த்து இன்னும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஹெய்டி, ‘சரி அதான் நாய்க்கு டிக்கெட் போட்டுவிட்டார்களே’ என்று, தன்னுடைய நாய்க்கு டிக்கெட் கொடுக்கப்பட்டதும் ஒரு இருக்கையில் நாயை அமர வைத்துள்ளார். பேருந்தில் ஹெய்டி இறங்கும்போது தன் இருக்கையைவிட்டு இறங்க மனமில்லாமல் நாய் அமர்ந்துகொண்டிருந்ததை பலரும் பார்த்து சிரித்துள்ளனர்.
இதுபற்றி பேருந்து ஊழியர்கள் சொல்லும்போது, ‘பொதுவாக வளர்ப்பு பிராணிகளுக்கு டிக்கெட் போடப்படுவதில்லை. ஆனால் அவற்றிற்கு டிக்கெட் போட்டு வசூலிக்கப்படும் தொகையானது, பேருந்தினை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு உதவும்’ என்று கூறியுள்ளனர். அந்த டிக்கெட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.