'சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்டிப்போட வேண்டும்'.. நடிகர் பேச்சு!
Home > தமிழ் newsசபரிமலைக்கு வரும் பெண்களை 2 துண்டாக வெட்டிப்போட வேண்டும் என மலையாள நடிகர் கொல்லம் துளசி கருத்து தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்களை அனுமதிக்கலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மேலும் பல்வேறு அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் மலையாள நடிகர் கொல்லம் துளசி விழாவொன்றில் பேசும்போது,''சபரிமலைக்கு பெண்கள் வந்தால் அவர்களை பாதியாக வெட்டிப்போட வேண்டும். ஒரு பாதியை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். இன்னொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் அலுவலகத்திற்கு வீச வேண்டும்,'' என கருத்து தெரிவித்திருக்கிறார்.
இவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதற்கு பலத்த கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
Women coming to #Sabarimala temple should be ripped in half. One half should be sent to Delhi and the other half should be thrown to Chief Minister's office in Thiruvananthapuram: Actor Kollam Thulasi, in Kollam #Kerala. pic.twitter.com/r4cL72mzJm
— ANI (@ANI) October 12, 2018