உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒருவாரம் சிறுநீர் பருகிய பெண்!
Home > தமிழ் newsபொதுவாகவே சூழலியல் ஆர்வலர்கள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல், காட்டுப் பகுதிகளுக்குள் ட்ரெக்கிங் போய்விட்டு வருவதுண்டு. ஆனால் எங்கு என்ன கிடைக்கும், எப்போது எதைச் சாப்பிடலாம், குறைவாகச் சாப்பிட்டு பசியை அடக்கிக் கொள்வது எப்படி என்பன போன்ற தகவல்களை அவர்கள் நன்கு அறிந்தவர்களாக இருப்பர்.
ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பெண், விபத்து காரணமாக மனிதர்கள் நடமாடும் பகுதிகளை விட்டு விலகி காருடன் உருண்டு சென்றுள்ளார். அதன் பின்னர், அவர் தான் வாழவேண்டும் என்கிற உறுதியுடன், மீட்க யாரேனும் வரும்வரை எல்லா இயற்கை வளங்களையுமே பயன்படுத்தியுள்ளார்.
ஆனால் உணவு பஞ்சத்தை போக்க மட்டும், முதலில் தான் தன் காரில் வைத்திருந்த பிஸ்கட் போன்ற உணவு பொருளை உண்டவர், மெதுவாக தண்ணீர் பருகத் தொடங்கியுள்ளார். ஆனால் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து தன் கழிவு நீரான சிறுநீரையே பருகியதாகச் சொல்வதில் தனக்கு எந்த தயக்குமும் இல்லை என்கிறார் புரூக் பிலிப்ஸ் என்கிற இந்த பெண்.
இணையத்தில் வைரலாகி வரும் புரூக் பிலிப்ஸ் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டுள்ளதாக அவரை காப்பாற்ற உதவிய மீட்ப்புப்படையினர் கூறியுள்ளனர்.