பேஸ்புக்கில் புரொஃபைல் மாற்றிய பெண்ணுக்கு காதலன் கொடுத்த கொடூர தண்டனை!
Home > தமிழ் newsபேஸ்புக்கில் ப்ரொபைல் பிக்சரை நீக்கிய காதலியின் முகத்தாடையை உடைத்த வழக்கில் இங்கிலாந்தை சேர்ந்த McNair என்ற நபர் சிறைசென்றார். பின்னர் அந்த நபர் விடுதலையான நிலையில் அவரின் காதலி, தான் அனுபவித்த மோசமான சூழல் குறித்து கருத்து வெளியிட்டுள்ளது சர்சசையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த மெக்னர் என்பவரை லோயிஸ் ஆஷ்டன் என்ற இளம்பெண் காதலித்து வந்துள்ளார். தொடக்கத்தில் லோயிஸ் ஆஷ்டனுடன் நெருக்கமாக இணைந்திருந்த மெக்னர் பிறகு அவருடனான நெருக்கத்தை குறைத்துக்கொண்டுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்துள்ளனர். இதனையடுத்து மெக்னருடன் லோயஸ் பேசுவதையும் நிறுத்திக்கொண்டார். இதன் பின்னர் மெக்னர் தனது முன்னாள் காதலி லோயஸ்க்கு தொடர்ந்து மன்னிப்பு கேட்டதன் மூலம் அவருடனான நட்பைப் புதுப்பித்துக்கொண்டார் .
இந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு லோயஸ் மெக்னரை தனது தோழியின் வீட்டுக்கு வர அழைப்பு கொடுத்தனுப்பியிருக்கிறார். ஆனால் மெக்னர் அங்கு வராமல் போக ஆத்திரமடைந்த லோயஸ் தனது பேஸ்புக் முகப்பில் மெக்னருடன் தான் இருந்த புகைப்படத்தை நீக்கியுள்ளார்.
இதனை அறிந்த மெக்னர் தனது வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த லோயஸை எழுப்பி அவள் முகத்தில் பலமாக அடித்துள்ளார். இதனால் லோயஸின் பற்கள் உடைபட்டு தாடை நொறுங்கியது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மெக்னருக்கு 36 வருடங்கள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது 11 மாதங்களே சிறை தண்டனை பெற்ற நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தன் வாழ்நாளில் நடைபெற்ற அந்த மோசமான சூழலை நினைவுகூர்ந்து பேசிய லோயஸ் இனி இது போன்று எவரும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம் என இளைய தலைமுறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.