கருணாநிதியின் சொத்து விவரங்களை மு.க.ஸ்டாலின் வெளிவிடுவாரா? அமைச்சர்!
Home > தமிழ் news
கலைஞர் கருணாநிதி, இளம் வயதிலேயே அரசியலுக்குள் நுழைந்தவர். முழுமூச்சாய் அரசியல் வாழ்க்கையை பிடித்து ஏற்று அதனை மெத்த படித்தவர். பின்னர் கலைஞரது வாரிசுகள், பேரப்பிள்ளைகள் என பலரும் கருணாநிதி குடும்பத்தில் இருந்தபடியே தனித்தனி எண்ணிலடங்கா ஸ்தாபனங்களை நடத்துகின்றனர்.
கல்லூரிகள் தொடங்கி, டிவி சேனல்கள் வரை பலவும் திமுக-குடும்ப உறுப்பினர்களின் பெயரில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், கருணாநிதியின் குடும்ப சொத்து விவரங்கள் பற்றி மு.க.ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா? என்று முக.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.