காணாமல் போன கணவரை 11 ஆண்டுகளுக்குப்பின் மனைவி கண்டுபிடித்து தரச்சொன்ன சம்பவம், போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈரோடு மாவட்டம் செம்மாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்-செல்வி தம்பதியர் கடந்த 2007-ம் ஆண்டு கோவிலுக்கு சென்றுள்ளனர். சாமி கும்பிட்டு வீடு திரும்புகையில் நீ வீட்டுக்கு போ, நான் என் அம்மா வீடு சென்று வருகிறேன் என செல்வியிடம் சொல்லி சென்ற ஆறுமுகம் அதன்பிறகு வரவேயில்லை.

 

தற்போது 11 ஆண்டுகள் கழித்து செல்வி போலீசில் சென்று புகார் கொடுக்க, போலீசார் இவ்வளவு நாள் ஏன் சொல்லவில்லை என்று கேட்டுள்ளனர். அதற்கு தான் படிக்காதவள் என்றும் கணவர் எப்படியும் திரும்பி வந்துவிடுவார் என நம்பிக்கையுடன் காத்திருந்ததாகவும் செல்வி தெரிவித்துள்ளார்.

 

தற்போது ஈரோடு போலீசார் ஆறுமுகம் காணாமல் போனது தொடர்பாக தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர்.

BY MANJULA | JUN 29, 2018 11:37 AM #ERODE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS