தவறான தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொலை செய்த மனைவிக்கு, 22 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சோபியா ஷாம், ஜான் ஆபிரஹாம் தம்பதி மெல்போர்ன் நகரில் வசித்து வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு மெல்போர்னில் உள்ள தனது வீட்டில் ஆபிரஹாம் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.

 

இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில் ஆபிரஹாம் சட்டையில் சயனைடு குப்பி இருந்ததால், சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை முடித்துவிட்டனர். ஆனால் போலீசாருக்கு இந்த வழக்கில் ஏராளமான சந்தேகங்கள் இருந்ததால் சோபியாவை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

 

இதில் ஆபிரஹாமின் மனைவி சோபியா, அடிக்கடி ஒரு இளைஞருடன் வெளியே செல்வது தெரிந்தது. ஒருநாள் சோபியா தனது டைரியை அந்த இளைஞரிடம் கொடுக்கும்போது போலீசார் இருவரையும் கையும்,களவுமாகக் கைது செய்தனர்.

 

அந்த டைரியில் பல திடுக்கிடும் தகவல்கள் இருந்தன. அந்த இளைஞர் பெயர் அருண் கமலாசன் என்பதும், அவர் ஷோபியாவின் முன்னாள் காதலர் என்பதும் தெரியவந்தது. இவர்களின் தொடர்புக்கு ஆபிரஹாம் இடையூறாக இருந்ததால், சோபியா தனது கணவருக்கு பழரசத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த விவரமும் வெளியானது.

 

இதையடுத்து சோபியாவையும், அருணையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக மெல்போர்ன் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.


அதில், ''சோபியாவும், அவருடைய காதலர் அருண் கமலாசன் ஆகிய இருவரும்சேர்ந்து சதி செய்து ஆபிரஹாமுக்கு பழரசத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தது விசாரணையில் உறுதியானது. அருண் கமலாசனுக்கு 27ஆண்டுகள் சிறையும், சோபியா ஷாமுக்கு 22 ஆண்டுகள் சிறையும் விதித்து தீர்ப்பளிக்கிறேன். இதில் கமலாசனுக்கு 23 ஆண்டுகளுக்கும், சோபியாவுக்கு 18 ஆண்டுகள் வரையிலும் பரோல் வழங்கக்கூடாது,'' என நீதிபதி தெரிவித்துள்ளார்.

BY MANJULA | JUN 23, 2018 12:11 PM #HUSBAND #WIFE #AUSTRALIA #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS