‘பிரபலம்னா தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து பதிவு போடனுமா?’.. சீறும் சானியா!

Home > தமிழ் news
By |

பிரபலங்கள் என்றாலே தீவிரவாதத் தாக்குதல்களை கண்டித்து சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவிட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை என்று சானியா மிர்ஸா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘பிரபலம்னா தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து பதிவு போடனுமா?’.. சீறும் சானியா!

மிக அண்மையில் நிகழ்ந்த புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎப் படைவீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து இந்தியாவே சோகத்தில் மூழ்கியது. இந்த தாக்குதலுக்கு ஜைஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்கள் வந்த நிலையில், இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா இதற்கு கருத்து கூறவில்லை என்று சர்ச்சைகள் எழுந்தன. 

அதற்கு, சானியா மிர்ஸா,  ‘ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்பவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன். பிரபலங்கள் என்றாலே தீவிரவாதத் தாக்குதல் பற்றி பொதுவெளியில் கருத்து சொல்லத்தான் வேண்டுமா? குறிப்பாக ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போஸ்டுகள் மூலமாகத்தான் தேசப்பற்றையும் நாட்டுப் பற்றையும் காட்ட வேண்டுமா?’ என்று காட்டமாகக் கேட்டுள்ளார்.

மேலும், ‘நான் தீவிரவாதத்துக்கு எதிரானவளே. ஆனாலும் அதனை வெளிப்படையாகச் சொல்லி நிரூபித்து அதற்கொரு பதிவு போடவேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை.  அமைதியை விரும்பும் எங்கள் மீது கோபத்தை, வெறுப்பை விதைப்பதை விட்டுவிட்டு நாட்டுக்கு உருப்படியாக எதையாவது செய்யுங்கள்’ என்று கூறியவர், அதே சமயம் ‘சிஆர்பிஎப் வீரர்கள் மரணமடைந்த பிப்ரவரி 14-ஆம் தேதியானது இந்தியாவின் கறுப்பு நாள்’ என்று தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா பாகிஸ்தான் கிரிக்கெட் பிரபலம் சோயப் மாலிக்-கை திருமணம் செய்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PULWAMAATTACK, SANIAMIRZA, INDIA, PAKISTAN