சர்வதேசப் போட்டிகளில் இருந்து தோனி 'ஓய்வு' பெறுகிறாரா?.. ரவிசாஸ்திரி விளக்கம்!

ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது. போட்டி முடிந்தபின் இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றனர். அப்போது முன்னாள் கேப்டன் தோனி நடுவரின் கையில் இருந்த பந்தை கேட்டு வாங்கி சென்றார்.

 

இதனால் அனைத்து சர்வதேசப் போட்டிகளிலும் இருந்து தோனி ஓய்வு பெறப் போகிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

இந்தநிலையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ரவிசாஸ்திரி தோனி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "தோனி எங்கும் போகவில்லை. மைதானம் மற்றும் ஆடுகளத்தின் திறன் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக பந்தை வாங்கி சென்றார்,'' என தெரிவித்துள்ளார். 

BY MANJULA | JUL 19, 2018 11:30 AM #MSDHONI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS