வாட்ஸ் ஆப்பைத் திறக்காமலேயே மெசேஜ் அனுப்பும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அதன் படி அவர்கள் உருவாக்கியுள்ள 'https://wa.me/'  என்ற டொமைன்-ஐ பதிவு செய்து அதில் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வசதிக்குப் பயனாளர்கள் தங்களின் வாட்ஸ் அப்-பை 2.18.138 க்கு மேம்படுத்த வேண்டும். இந்த வசதி ஆண்ட்ராய்டு பீட்டாவில் மட்டும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

 

பயனர்கள் முதலில் https://wa.me/91 (phone number) என்ற தளத்தில் தாங்கள் மெசேஜ் செய்ய விரும்புவரின் மொபைல் நம்பரை டைப் செய்ய வேண்டும். அதன் பின் URL தானாக வாட்ஸ் அப் பகுதிக்குப் பயனாளர்களைக் கொண்டு செல்லும். அங்கு நீங்கள் நம்பர் பதிவிட்டவருடன் மட்டும் மெசேஜ் செய்யலாம். நீங்கள் பதிவிட்ட நம்பர் தவறானதாக இருந்தால் அதுவே தவறு எனச் சுட்டிக்காட்டி விடும்.

 

இந்த இடத்தில் உங்களுக்கு சரியான மொபைல் எண் நினைவில் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுதல் அவசியம் ஆகும்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS