‘ஒரே நேரத்தில் இவ்ளோ பேருக்குதான் மெசேஜ் அனுப்பலாம்’.. ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிய வாட்ஸ்ஆப்!

Home > தமிழ் news
By |

இனி ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பார்வேர்டு செய்ய முடியும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் மிகவும் கண்டிப்புடன் அறிவித்துள்ளது.

‘ஒரே நேரத்தில் இவ்ளோ பேருக்குதான் மெசேஜ் அனுப்பலாம்’.. ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிய வாட்ஸ்ஆப்!

வாட்ஸ்அப் மூலம் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் பலருக்கும் பார்வேர்டு செய்யும் வசதி இருந்தது. இதனால் ஒரு செய்தி உண்மையானதா இல்லையா என்பதை ஆராயாமல் பலருக்கும் பலர் பார்வேர்டு செய்து வந்துள்ளனர். காணாமல் போய் பல மாதங்கள் ஆனவர்களை தற்பொழுது காணவில்லை என பகிருவது,குணமாகி பலமாதங்கள் ஆன நபருக்கு ரத்தம் தேவை என்பது போன்ற பழைய செய்திகளை நாம் அடிக்கடி கண்டிருப்போம். 

தவிர, இந்த போட்டோவை பத்து பேருக்கு ஷேர் செய்தால் நல்லது நடக்கும் என பகிருவது,'உண்மையான தமிழனா இருந்தா இதை ஷேர் செய்' என்பன போன்ற வாசகங்களை உபயோகித்தும் பகிரப்பட்டும் வந்துள்ளனர். மேலும் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பற்றி தவறான செய்திகளை பரப்பிய வண்ணம் பலர் இருந்துள்ளனர்.

இதுபோன்று வாட்ஸ் அப் மூலம் தவறான செய்திகள் பகிரப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து,கடந்த ஜூலை மாதம் உலகளவில் ஒரே நேரத்தில் 20 பேருக்கு மட்டுமே ஒரு செய்தியை அனுப்ப இயலும் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் இந்தியாவில் 5 பேர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும் என அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவைப் போல பிற நாடுகளுக்கும் செய்திகளை பகிரும் எண்ணிக்கை ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

WHATSAPP, INDIA, MESSAGES