Watch Video:'செய்திகள் வாசிப்பது உங்கள் தஹீல்".....வரலாற்றில் இடம்பிடித்த சவூதி பெண்!
Home > தமிழ் newsஉலகிலேயே பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ள நாடு சவுதி அரேபியா.அங்கு முதல் முறையாக அல் சவுதியா எனும் தொலைகாட்சியில் "வீம் அல் தஹீல்" என்ற பெண் செய்திவாசிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது.
சவுதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசராக, மன்னர் சல்மானின் இளைய மகனான முகமது பின் சல்மான் சமீபத்தில், பொறுப்பேற்றுக்கொண்டார் . இவர் இளவரசராகப் பதவியேற்ற பின், அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைளை அதிரடியாக மேற்கொண்டுவருகிறார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். அதன் படி பெண்கள் கார் ஓட்ட அனுமதி, சவுதியில் திரையரங்கம், விண்வெளி திட்டம் போன்றவை அதிரடியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் "வீம் அல் தஹீல்" என்ற பெண் செய்திவாசிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் சவுதியின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.தினமும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும், முக்கிய செய்திகளை வாசிக்க மட்டும் இவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவரின் சாதனையை சவுதியா தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் தெரிவித்திருக்கிறது.
CONFIDENT...FOCUSED... BEAUTIFUL
— حسن سجواني 🇦🇪 Hassan Sajwani (@HSajwanization) September 21, 2018
Watch first #Saudi female newscaster on Saudi National TV in action ! @WeamAlDakheel @saudiatv pic.twitter.com/dlroOSLOGQ