இடைத்தேர்தல், லோக்சபா, சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம்.. தினகரன் சூளுரை!
Home > தமிழ் news
அதிமுக இரண்டாக உடைந்தபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியிலும், துணை முதல்வர் ஒரு அணியிலும் இருந்தனர். பின்னர் முதல்வரும் துணை முதல்வரும் இணைய, சசிகலா சிறை செல்ல, அவரின் ஆதரவோடு டிடிவி தினகரன் வெளிச்சத்துக்கு வந்தார். இரட்டை இலை சின்னத்தை பெற பலரும் முயன்ற நிலையில், இறுதியில் குக்குர் சின்னம் அவருக்கு ஒதுக்கப்பட்டது. அவரது கட்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற பெயருக்கு அனுமதியும் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், வரவிருக்கும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத் தேர்தலில் தன்னுடைய குக்கர் சின்னம்தான் வெற்றி பெறும் என்றும் இடைத் தேர்தல் மட்டுமல்லாமல் லோக்சபா தேர்தலிலும் தாங்களே வெல்வோம் என்றும் கூறியவர், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம் என்று அமைதியாகக் கூறியுள்ளார்.
AIADMK, TTVDHINAKARAN