மும்பை இந்தியன்ஸ் அணியை 'வீட்டுக்கு' அனுப்புவோம்: அஸ்வின் நம்பிக்கை

பெங்களூர் அணியுடனான தோல்விக்குப் பின்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் அதே இடத்தில் நீடித்து வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு  அந்த அணி தகுதி பெறவேண்டும் எனில் எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெறவேண்டும். அல்லது மற்ற அணிகளின் முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும்.

 

இந்த நிலையில் தோல்விக்குப் பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறுகையில், "தோல்வி ஏமாற்றமாக உள்ளது. 20 ஓவர்கள் ஆடவில்லை. 3-4 விக்கெட்டுகளை விறுவிறுவென இழந்து விட்டோம்.வெற்றி மீண்டும் எங்கள் பக்கம் திரும்ப வேண்டும்.

 

பந்துவீச்சு ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது. எங்கள் அணியின் பேட்டிங் வரிசை கவலையளிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியை வீட்டுக்கு அனுப்ப எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொள்வோம். புனேவில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்,'' என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS