கோலியா? அவர சமாளிக்க தனி பிளான் வெச்சிருக்கோம்.. கிரிக்கெட் வீரர் பகீர்!
Home > தமிழ் newsஆஸ்திரேலிய தொடர்களை வெற்றிகரமாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் நேப்பியர் நகரில் உள்ள மெக்லீன் மைதானத்தில் தொடங்கிய நியூசிலாந்து - இந்தியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பிறகு பேட்டி அளித்த நியூஸிலாந்து அணியின் ஸ்டார் கிரிக்கெட் வீரர் லூகி ஃபெர்குஸன், ‘இந்த தோல்விக்கான காரணத்தை தங்களால் புரிந்துகொள்ள முடிகிறது; அத்தனை சிறப்பாக விளையாடவில்லை என்பதால் இந்திய அணியுடனான முதல் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறோம். ஆனால் இது ஒரு பாடம்தான். விளையாட்டினை பொருத்தவரை இவை சகஜமான ஒன்றுதான்’ என்று கூறினார்.
மேலும் பேசியவர், இந்த தோல்வியில் இருந்து தாங்கள் கற்றுக்கொண்ட பாடம் தங்களுக்கு மிகவும் உதவியதாகவும் அதை வைத்துக்கொண்டு ஒரு புரிதலுடன் அடுத்தடுத்த ஆட்டங்களில் இந்த தோல்வி நிலையில் இருந்து மீண்டு எழுந்து வெளிவரவிருப்பதாகவும் கூறினார். மேலும் முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு அந்த அனுபவத்துடன் அடுத்து களமிறங்கி விளையாடுவோம், என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்திய அணியின் கேப்டனும், அதிரடி வீரருமான விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்கொள்வது பற்றி கேட்டபோது, கோலியின் ஆட்டத்தை எதிர்கொள்வதற்கு தாங்கள் தனியாக ஐடியா வைத்திருப்பதாகவும் அதற்கான திட்டங்களை முன்னரே போட்டு வைத்திருப்பதாகவும் பேசியுள்ளார்.
இதனிடையே அடுத்து வரவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில் விளையாடத் தேவையான ஓய்வினை கோலிக்கு கடைசி 2 போட்டிகளிலும் அதன் பிறகுள்ள டி20 போட்டிகளிலும் வழங்கவிருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதனால் இந்திய அணியின் தலைமையாக இருந்து, தற்போது துணை கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மா வழிநடத்துவார் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.