நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத்-பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 54 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 23 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பில் அங்கித் ராஜ்புத் 4 ஓவர்களுக்கு வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற குறைந்த இலக்குடன் களம் கண்ட பஞ்சாப் அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ரஷீத்கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெற்றிக்குப்பின் பேசிய ரஷீத்கான், " கே.எல்.ராகுல் விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி. குறைவாக ரன் எடுத்தாலும் பந்துவீச்சால் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. எங்கள் பேட்ஸ்மேன்கள் இன்னும் கொஞ்சம் ரன்கள் அதிகமாகச் சேர்க்க வேண்டும். அடுத்த போட்டியில் ரன்கள் அதிகமாகக் குவிப்போம்,'' என்றார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Dhoni creates record in RCB vs CSK match
- தோனி எங்களுக்கு எதிராக 'சிக்ஸ்' அடிப்பது நன்றாக இல்லை: விராட் கோலி
- RCBvCSK registers most sixes in an IPL match
- RCB captain Virat Kohli fined Rs 12 lakh
- 'யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது'.. தோனியை வாழ்த்திய பிரபலம்!
- மஞ்ச சட்ட போட்ட 'மகேந்திர சிங்கம்' பார்த்து இருக்கியா?
- பெங்களூர் பவுலர்களை 'வெளுத்தெடுத்த' தோனி-ராயுடு... சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
- RCB vs CSK: Dhoni finishes off in style!
- சென்னை பவுலர்களை 'துவைத்தெடுத்த' பெங்களூர்.. சூப்பர் கிங்ஸ்க்கு 'இலக்கு' இதுதான்!
- RCB vs CSK: Another big target for CSK!