இளைஞர் கழுத்தில் மாலைபோல் பாம்பை அணிவித்து போலீஸார் விசாரணை.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ் news
By |

போலீஸாரிடம் பிடிப்பட்ட இளைஞர் ஒருவரின் கழுத்தில் பாம்பினை மாலை போல் அணிவித்து, அந்த இளைஞரை போலீஸார் துன்புறுத்துவது போன்ற வீடியோ காட்சி நெட்டிசன்களை அச்சமூட்டியதோடு, வீடியோ வைரலாகியுள்ளது.

இளைஞர் கழுத்தில் மாலைபோல் பாம்பை அணிவித்து போலீஸார் விசாரணை.. வைரல் வீடியோ!

இந்தோனேசியாவின் கிழக்கு பாப்யாவில்தான் இப்படி ஒரு மிரளவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. செல் போனை திருடியதற்காக பிடிப்பட்ட அந்த இளைஞனின் கைகள் பின்புறம் வளைத்துக் கட்டப்பட்ட நிலையில், அவரிடம் போலீஸார் விசாரணை செய்தபோது அவன் ஏதும் பேசாமல் இருந்ததால், பொறுமையிழந்த போலீஸார் அந்த இளைஞரது கழுத்தில் ஒரு நீளமான பாம்பினை மாலைபோல் அணிவித்துள்ளனர்.

பார்ப்பதற்கு மலைப்பாம்பைப் போல் இருக்கும் அந்த பாம்பு கழுத்தில் ஊரத் தொடங்கியதும், அச்சத்தில் அந்த இளைஞர் உறைந்துள்ளார். ஆனாலும் விடாப்படியாக, அந்த பாம்பின் தலையினை பிடித்து போலீஸார் அந்த இளைஞனின் வாய்க்கு அருகே கொண்டு சென்றும், இளைஞரின் பேண்ட்டுக்குள் நுழைத்தும் அவரை துன்புறுத்தியுள்ளனர். இந்த அதிரவைக்கும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலான நிலையில், இந்த முறைகேட்டான விசாரணைக்காக மன்னிப்பு கேட்டுள்ளார், இந்தோனேசியாவின் ஜெய்விஜயா பகுதியின் தலைமை போலீஸ் அதிகாரி டோனி ஆனந்தா ஸ்வதயா.

மேலும், இந்த விசாரணைக்கு பயன்படுத்தப்பட்ட பாம்பு ஒரு விஷம் இல்லாத பாம்பு என்று கூறப்பட்டுவருகிறது. ஆனால் கைதியாக இருக்கும்பட்சத்திலும் இதுபோன்று ஒருவரை துன்புறுத்தியிருப்பதைப் பார்த்து, ஆத்திரமடைந்த நெட்டிசன்கள் பலரும் இந்த கொடுமையான செயலுக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

BIZARRE, POLICE, SUSPECT, VIRALVIDEO