சைக்கிளில் 'சாகசம்' செய்யும் தல தோனி.. வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |
சைக்கிளில் 'சாகசம்' செய்யும் தல தோனி.. வைரல் வீடியோ!

இங்கிலாந்து-இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது.டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், கிரிக்கெட் வீரர் தோனி தனது விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்து வருகிறார்.

 

இந்தநிலையில் சைக்கிளில் சாகசம் செய்வது போல, தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அந்த வீடியோவில் சற்றே அகலமான குச்சி ஒன்றை வாயில் கவ்விக்கொண்டு, காதில் ஹெட்போன்கள் மாட்டிக்கொண்டு தோனி சைக்கிள் சாகசம் செய்கிறார். இதுகுறித்து அவர், " இது வெறும் வேடிக்கைக்காக, வீட்டில் செய்து பாருங்கள்,'' என தெரிவித்துள்ளார்.

 

 

Just for fun, plz try it at home.

A post shared by M S Dhoni (@mahi7781) on