Video: வைரலாகும் அம்பானி மகளின் திருமண அழைப்பிதழ்.. விலை எவ்ளோ தெரியுமா?
Home > தமிழ் news
இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் வீட்டில் முதல் திருமணம் வருகின்ற டிசம்பர் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இவரது மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் அஜே பிரமால் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெறவுள்ளது.
பிரதமர், குடியரசுத்தலைவர், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.திருமணம் நெருங்கி வருவதையொட்டி அம்பானி-அஜே பிரமால் குடும்பத்தினர் அழைப்பிதழ்களை உறவினர்கள், நண்பர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
புத்தகவடிவில் திருமண அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழின் மேல் இஷா ஆனந்த் ஆகியோரின் முதல் எழுத்தைக் குறிக்கும் வகையில் ia என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. உள்ளே இஷா-ஆனந்த் இருவரும் தங்கள் திருமணத்தில் பங்கேற்று அனைவரும் ஆசி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அழைப்பிதழ் உள்ள பாக்ஸை திறந்ததும் காயத்ரி மந்திரம் ஒலிக்கிறது, மேலும் இந்த அழைப்பிதழின் உள்ளே 4 சிறிய பாக்ஸ்கள் உள்ளது. அவற்றில் விருந்தினர்களுக்கான பரிசுகள் உள்ளன.
சுமார் 3 லட்சம் மதிப்புள்ள இந்த திருமண அழைப்பிதழ், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.