‘ஏர்போர்ட்டுக்கு வந்த போட்டோகிராபரை ராகுல்காந்தி நடத்திய விதம்’..வைரல் வீடியோ!
Home > தமிழ் newsவரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராகுல்காந்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
ராகுல்காந்தி தொடர்ந்து வட மாநிலங்கள் முழுவதும் செல்லும்போது ஏழை எளிய மக்களின் வீட்டுக்குச் சென்று உணவருந்துவது, பொதுமக்களோடு உரையாடுவது, சிறுவர்களின் செயல்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நடந்துகொள்வது, டீ கடைக்காரர்களுடன் பேசிக்கொண்டு எதார்த்தமாக நின்று டீ அருந்துவது போன்ற விஷயங்களில் ஈடுபடுவார்.
அதனைப் பார்க்கும் பலரும் ராகுல்காந்தியின் எளிமை மற்றும் எதார்த்தத்தை பார்த்து வியந்துதான் போவார்கள். எனினும் அவர் மக்களின் ஏகோபித்த நம்பிக்கை வாக்கரசியலுக்காக பயன்படுத்தும் வகையில் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார் இது அவரது இயல்பல்ல என்றும் விமர்சனங்கள் எழுவதுண்டு. ஆனால் தற்போது ராகுல் காந்தி நடந்துகொண்டுள்ள செயலுக்கு பலரும் மனமொப்பி பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற ராகுல்காந்தி, தற்போது ஒடிசாவில் மிக தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். இதன் நிமித்தமாக ஒடிசாவின் புவனேஸ்வருக்குச் சென்ற ராகுல் காந்திக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அது சமயம் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார் ராகுல் காந்தி.
அப்போது ராகுல் காந்தியைச் சுற்றி நின்றுகொண்டிருந்த புகைப்பட பத்திரிக்கையாளர் ஒருவர், ராகுல் காந்தியை போட்டோ எடுக்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைப் பார்த்த ராகுல் காந்தி பதற்றத்துடன் அந்த புகைப்படக்காரரின் அருகே சென்று அவர் எழுவதற்கு உதவினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH Congress President Rahul Gandhi checks on a photographer who tripped and fell at Bhubaneswar Airport, Odisha. pic.twitter.com/EusYlzlRDn
— ANI (@ANI) January 25, 2019