"ஒழுக்கமில்லாத பிரபல இந்திய வீரர்"...பேருந்திலிருந்து பாதியில் இறக்கிவிட்ட வார்னே!
Home > தமிழ் newsஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி வீரரான வார்னே, ‘நோ ஸ்பின்’ (No Spin) என்ற தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியிருக்கிறார்.அதில் ''ஜடேஜாவை ஓடும் பேருந்தில் இருந்து பாதியில் இறக்கிவிட்டதாக'' தெரிவித்துள்ளார்.
ஷேன் வார்னேயின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் பல பேட்டிங் ஜாம்பவான்களே திணறி இருக்கிறார்கள்.ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்ந்தவர்.இவர் தனது வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான சம்பவங்களை தொகுத்து ‘நோ ஸ்பின்’ என்ற பெயரில் சுயசரிதையாக வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகத்தில் அவர், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த போது, எதிர்கொண்ட பல பிரச்சனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.அதில் முகமது கைஃப், தனக்கு பெரிய அறை வேண்டும் என கேட்டது பற்றியும், முனாப் பட்டேல், மிகவும் வெளிப்படையாக, சிரிப்பு உணர்வோடு பேசியது குறித்தும் அவர் அதில் எழுதியுள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக திகழும் ரவீந்தர ஜடேஜா குறித்தும் பல சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.அதில் ஜடேஜா விளையாடும் தன்மையும்,அவரின் உற்சாகமான செயல்பாடுகளும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.அதே நேரத்தில் அவரின் ஒழுக்கமின்மை எனக்கு கடும் அதிர்ப்தியை கொடுத்தது.
மேலும் இதுகுறித்து அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ள அவர் 'ஒரு சில விஷயங்கள் என்னால் பொறுத்து கொள்ள முடியும். ஆனால், காலதாமதமாக வருவதை என்னால் ஏற்று கொள்ளவே முடியாது. முதல் முறையாக வீரர்களின் பேக் மற்றும் உபகரணங்களில் குழப்பம் இருந்தததால் லேட் ஆனது, அதை நான் ஏற்றுக்கொண்டேன். இரண்டாவது முறையும் லேட்டாகவே வந்தார்.அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் 9 மணிக்கு கிளம்புவதாக இருந்தோம்.ஆனால் ஜடேஜா லேட்டாக வந்தார். இதனால், அவரை விட்டு, விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதேபோல் ஒருமுறை பயிற்சி முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பும்போது, பேருந்தை பாதியிலேயே நிறுத்தி, லேட்டாக வந்ததால் ஜடேஜாவை கீழே இறங்கி நடந்து வரும்படி கூறினேன்.அதன்பிறகு ஜடேஜா காலதாமதமாக வருவதில்லை என வார்னே அவரின் சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.