வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் விசுவாசம். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க,முக்கிய வேடங்களில் தம்பி ராமையா,ரோபோ சங்கர், விவேக், யோகிபாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

 

விசுவாசம் படத்தின் 40% படப்பிடிப்பு இதுவரை முடிந்துள்ளதாகவும், பொங்கலுக்கு விசுவாசத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த நிலையில், விசுவாசம் அஜீத்துக்கு மிகப்பெரிய ஹிட்டாக அமையும் என விநியோகஸ்தர் சத்திவேல் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற விழாவொன்றில் பேசிய சக்திவேல், " தம்பி ராமையா இப்படம் குறித்து நிறையமுறை என்னிடம் பேசியிருக்கிறார். இதனை வைத்துப்பார்க்கும்போது விசுவாசம் சிறுத்தை சிவா-அஜீத் இருவருக்கும் மிகப்பெரிய ஹிட்டாக அமையும் என நினைக்கிறேன்,'' என்று தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS