'அடாவடி+தடாலடி'.. அடுத்தடுத்து சாதனைகள் படைக்கும் 'தல'யின் விஸ்வாசம்!

Home > தமிழ் news
By |
'அடாவடி+தடாலடி'.. அடுத்தடுத்து சாதனைகள் படைக்கும் 'தல'யின் விஸ்வாசம்!

தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் அடுத்தடுத்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

 

அஜித்,நயன்தாரா மற்றும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் விஸ்வாசம்  பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இதில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.

 

மதுரை மாவட்டத்தின் காவல் தெய்வமாக விளங்கும் தூக்குதுரை என்னும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

விஸ்வாசம் மோஷன் போஸ்டர் வெளியான சிலமணி நேரங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட மோஷன் போஸ்டர், பாலிவுட் சூப்பர் ஸ்டார்  அமீர் கானின் தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் மோஷன் போஸ்டர் ஆகியவற்றின் லைக்குகளை முறியடித்து இந்தியாவின் அதிகம் லைக்குகள் பெற்ற போஸ்டர் என்னும் சாதனையைப் படைத்தது.

 

 

இதுவரை யூ டியூபில் 422 ஆயிரம் லைக்குகளைப் பெற்றுள்ள விஸ்வாசம் மோஷன் போஸ்டர் 53,06,099 பார்வைகளைப் பெற்று தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் டிரெண்டாகி வருகிறது.

 

தற்போது தல ரசிகர்கள் இதனை #IndiasMostLikedViswasamMP என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.