தாதா என கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப் படும் கிரிக்கெட் வீரர் கங்குலி இன்று தனது 47-வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

அந்தவகையில் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கும், நான்கு புகைப்படங்களை வெளியிட்டு கங்குலிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:-

 

1.எழுந்திரு, கண்களை இருமுறை சிமிட்டி களத்தில் இறங்கி ஆடு.

 

2. பந்துவீச்சாளர்களை மட்டுமல்லாது பார்வையாளர்களையும் அடித்து நொறுக்கிடு.(வன்முறையைக் குறிப்பிடவில்லை)


3. உன் பேட் மட்டும் சுழலவில்லை உத்வேகத்தோட்டு நீ பந்து வீசும் போது உன் தலைமுடியும் சுழலும்.


4. யாருமே பார்க்கவில்லை என்பது போல் வெற்றியை கொண்டாடு.

BY MANJULA | JUL 8, 2018 5:43 PM #CRICKET #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS