'என் கையிலேயே என் அப்பாவின் உயிர் பிரிந்தது'.. முதன்முறையாக மனந்திறந்த தளபதி!
Home > தமிழ் newsஎனது கையிலேயே எனது அப்பாவின் உயிர் பிரிந்தது என, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது தந்தையின் மறைவு குறித்து முதன்முறையாக மனந்திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,'' கர்நாடகா - டெல்லி அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டி கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்றது. அந்த இரவு நான் களமிறங்கி 40 ரன்கள் அடித்தேன். தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்தேன்.
நான் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் எனது தந்தை நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். நான் எழுந்து சென்று அக்கம்-பக்கம் உள்ளவர்களை அழைத்து வந்தேன். ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்தேன். அது இரவு நேரம் என்பதால் ஒருவரும் எழுந்து வரவில்லை.ஆம்புலன்ஸ் வருவதற்குள் எனது தந்தையின் உயிர் பிரிந்துவிட்டது.
அந்த நேரத்தை என்னால் மறக்க முடியாது. நான் கண்ணீர் விட்டுக் கதறிய நேரமிது. அதன் பின்னர் தான் நான் கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்தினேன். எனது கனவுகளையும், எனது தந்தையின் கனவுகளையும் நனவாக்க அதிகமாக உழைத்தேன்.எனது சக்தி அனைத்தையும் செலவு செய்தேன்,'' என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.