3 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஊரே கூடி அளித்த தண்டனை!
Home > தமிழ் news
பட்ட பகலில் பொதுமக்கள் பலரும் சேர்ந்து இளைஞர் ஒருவரை அடித்து தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே, பட்ட பகலில் இந்த இளைஞர் 3 வயது பெண் குழந்தையை, மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்ய முயற்சித்ததை அடுத்து, சிறுமியின் அழுகுரல் கேட்டு தகவல் அறிந்த ஒருவர் மூலம் மொத்த கிராம மக்களும், இளவரசன் என்கிற அந்த இளைஞரை அடித்தே தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரை காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்லும் வழியில் காவலர்களே வந்ததால், அந்த இளைஞர் உயிருடன் தப்பினார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதோடு, அவர் மீது பாக்ஸோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
SEXUALABUSE, VILLUPURAM, TAMILNADU, CRIME, CHILDABUSE