Watch Video: சர்கார் ரிலீஸ்க்கு இப்படி செய்யாதீர்கள்.. ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

Home > தமிழ் news
By |
Watch Video: சர்கார் ரிலீஸ்க்கு இப்படி செய்யாதீர்கள்.. ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

சர்கார் பட வெளியீட்டின்போது தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள் என நடிகர் விஜய், தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக சர்கார் திரைப்படம் வருகின்ற 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 

இதுகுறித்து காஞ்சிபுரம் மக்கள் இயக்க தலைவர் சரவணன், பிக்பாஸ் புகழ் நடிகர் பாலாஜி இருவரும் வீடியோ வடிவில் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில்,''சர்கார் பட ரிலீஸின் போது கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம். அதற்குப் பதிலாக பால் வாங்க கஷ்டப்படும் ஏழைக்குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள்.

 

தளபதி உங்க மேல அவ்ளோ அன்பா பாசமா இருக்காரு. அதேபோல அவர் சொல்ற வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து நீங்க அப்படி செஞ்சீங்கனா, அது உங்களுக்கும் பெருமையா இருக்கும். தளபதிக்கும் பெருமையா இருக்கும்,'' என தெரிவித்துள்ளனர்.