அதிகாலை 2.45 மணிக்கு ‘கலைஞர்’ நினைவிடம் சென்ற ’புரட்சி கலைஞர்’!

Home > தமிழ் news
By |
அதிகாலை 2.45 மணிக்கு ‘கலைஞர்’ நினைவிடம் சென்ற ’புரட்சி கலைஞர்’!

கடந்த வாரம் திமுக தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மு.கருணாநிதி உயிரிழந்தார். இதனை அடுத்து பல்வேறு அரசியலாளர்களும் பிரலங்களும் அவரின் நினைவிடத்துக்கும், அவரின் பூத உடலுக்கும் அஞ்சலி செலுத்திச் சென்றனர். ஆனால் அதுசமயம் அமெரிக்காவில் சிகிச்சைக்காக 40 நாட்கள் சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னுடைய இரங்கலை வீடியோவாக வெளியிட்டிருந்தார். அதில் அவர் தேம்பி அழும் காட்சிகள் அவருக்கும் கலைஞர் கருணாநிதிக்குமான உறவை பிரதிபலிக்கும் படியாய் இருந்தன. 

 

இந்நிலையில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். இன்று அதிகாலை 2 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த விஜயகாந்த் அங்கிருந்து தனது இல்லத்திற்கு போகாமல் தன் மனைவி மகனுடன் சென்னை மெரினாவிற்கு சென்றிருக்கிறார். அங்குள்ள கருணாநிதி நினைவிடத்தை அடைந்து, அதிகாலை 2.45 மணி அளவில் கண்ணீர் மல்க கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்.