விமல்-ஓவியா நடிப்பில் உருவாகியிருக்கும் 'களவாணி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் மாதவன் இன்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில்வெளியிட்டார்.விரைவில் இசை வெளியிடப்படும் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விமலின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த நடிகர் சூரி தவிர, பிற நடிகர்கள் அனைவரும் நடித்துள்ளனர். சூரிக்குப் பதிலாக ஆர்.ஜே.விக்னேஷ் இப்படத்தில் விமலின் நண்பனாக நடித்துள்ளார். படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | JUN 30, 2018 6:58 PM #KALAVAANI2 #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS