Looks like you've blocked notifications!
கிரிக்கெட் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல - பிரபல அரசியல்வாதி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் வேளையில்,  சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்,    ஐபிஎல் போட்டியை நிறுத்துவதற்கு முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், "தமிழ் தெரிந்த கிரிக்கெட் வீரர்கள் எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் இருக்கிற லட்சக்கணக்கான ரசிகர்கள் பெரும் கோபத்தோடு இருக்கிறார்கள்.

 

நீங்கள் வெளியேறி ஷாப்பிங்ற்கோ உணவு உண்ணவோ செல்லும்போது, வேறுவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டால் வேல்முருகனோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சியோ, போராளிகளோ பொறுப்பல்ல", என்று தெரிவித்தார்.

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கிரௌன் பிளாசா நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BY SATHEESH | APR 9, 2018 1:23 PM #CHENNAI-SUPER-KINGS #VELMURUGAN #IPL2018 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS