சரக்கு லாரிகளின் கட்டணம் அதிரடியாக 25 % உயர்வு... காய்கறிகளின் விலை??

Home > தமிழ் news
By |
சரக்கு லாரிகளின் கட்டணம் அதிரடியாக 25 % உயர்வு... காய்கறிகளின் விலை??

நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோ, டீசல் ஆகியவைகளின் விலை அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்குள், சரக்கு லாரிகளின் கட்டணம் 22 % லிருந்து 25 % என்கிற அளவுக்கு  உயத்தப்ப்பட்டு லாரி புக்கிங் ஏஜெண்ட்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.


நேற்று காலை முதல் அமலுக்கு வந்த இந்த கட்டண உயர்வால், சேலம்-சென்னைக்கு பயணவழியில் ரூ.8,500 வசூலிக்கப்பட்ட சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் தற்போது ரூ.10,000ஆக அதிகரித்துள்ளது.


இந்நிலையில் தென்னகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் ரூ.25,000 வரை உயர்ந்துள்ளது.  இதனால் டெல்லிக்கு ரூ.1.15 லட்சத்தில் இருந்து ரூ.1.40 லட்சமாக வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது.  இந்த சூழ்நிலையில் காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்வதாகத் தெரிகிறது.  இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

VEGETABLES, INDIA, LORRY FREIGHT CHARGES