திருமுருகன் காந்தி கைது.. வைகோ கண்டனம்!
Home > தமிழ் newsஇன்று காலை பெங்களூரு விமான நிலையத்தில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.இந்த கைது நடவடிக்கைக்கு மதிமுக தலைவர் வைகோ உட்பட பலரும் தமிழகத்தில் இருந்து கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம், சுயாதீன மாநில உரிமை, தற்சார்புப் பொருளாதாரம், சுற்றுச் சூழலுக்கு எதிரான நகரமயமாதல், மனித வள அழிவுக்கு வித்திடும் உலகமயமாதல் உள்ளிட்ட கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து போராட்டங்களையும் களப்பணிகளையும் செய்பவர் திருமுருகன் காந்தி.
’மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் ஈழத்தமிழர் இனப்படுகொலையை உலக அரங்கில் வெளிக்கொண்டுவரவும் போராடியவர். முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சனையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு ஜெனிவாவின் மனித உரிமைக் கவுன்சிலில் அண்மையில் பதிவு செய்திருந்தார். அதன் காரணமாக ஜெனிவா சென்று திரும்பிய திருமுருகன் காந்தி இன்று காலை பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே திருமுருகன் காந்தியை கைது செய்ய லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை கர்நாடக ரயில் நிலையத்தில் போலீஸ் அவரை கைது செய்தனர். கடந்த வருடம் சென்னை மெரினாவில் ஈழப்போரில் இறந்தவர்களுக்காக மெரினாவில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியபோது கைது செய்யப்பட்டு பின்னர் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.