ஜீரோ கிராவிட்டியிலும் உசைன் கில்லி தான்.. வீடியோ உள்ளே!

Home > தமிழ் news
By |
ஜீரோ கிராவிட்டியிலும் உசைன் கில்லி தான்.. வீடியோ உள்ளே!

உலகின் வேகமான மனிதர் என அழைக்கப்படுபவர் உசைன் போல்ட்.இவர் தொடாத மெடல்களே இல்லை என்று சொல்லலாம்.100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் பல உலக சாதனைகளை படைத்திருக்கிறார். ஒலிம்பிக்கின் தங்க மகன் என்றே இவரைக் கூறலாம்.ஒலிம்பிக்கில் ஓடி,ஓடி இதுவரை 8 தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறார்.

 

இந்நிலையில் புதிதாக ஒரு சாதனைக்கு உசைன் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.இவர் நேற்று பிரான்ஸில் ஏர்பஸ் எ310 ரக ஜீரோ க்ராவிட்டி விமானத்தில் பயணம் செய்தார். இதன் தன்மை செயற்கையாக க்ராவிட்டி இல்லாத சூழ்நிலையைக்  கொண்டிருக்கும்.ஆனால் விண்வெளியில் இருக்கும் அளவிற்கு முழுமையாக க்ராவிட்டி இல்லாத சூழ்நிலையை கொண்டிருக்காது.இதில் க்ராவிட்டியின் அளவு குறைவாகவே இருக்கும்.

 

இந்த விமானத்தில் சம்பைன் அருந்திக்கொண்டு பயணம் செய்து கொண்டிருந்த உசைனிடம் அங்கிருந்தவர்கள் ஜாலியாக ஒரு டாஸ்க்கை கொடுத்து செய்ய சொன்னார்கள்.அது என்னவென்றால் அந்த விமானத்தினுள்ளே ஓடவேண்டும் என்பதுதான்.அந்த சவாலை ஏற்ற உசைன் அதிலும் பட்டையை கிளப்பியுள்ளார்.இந்த புதிய சாதனையை செய்த உசைன் அந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

USAIN BOLT, ZERO GRAVITY