உ.பி-யில் கொடூரம்: 18 மாத குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய கணவர்!

Home > தமிழ் news
By |
உ.பி-யில் கொடூரம்: 18 மாத குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய கணவர்!

உத்திர பிரதேசத்தில்,  தன் 18 மாதக் குழந்தையை  மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தின் பரேலி எனும் கிராமத்தில் வசித்து வந்தவர் அரவிந்த் கங்வார்.  இவருடைய மனைவிக்கு, இரண்டாவது ஒரு  ஆண் குழந்தை பிறந்த 5 நாட்களுக்கு பிறகு, தனது முதல் பெண் குழந்தையான 18 மாதங்களே ஆன காவ்யாவை மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார்.

 

ஆண் குழந்தைக்கு விருப்பப் பட்ட இவர், இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்த 5 நாட்களுக்கு பிறகு, மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த தனது முதல் பெண் குழந்தையை தூக்கி வீசியுள்ள சம்பவத்தால் கொலை முயற்சியில் கைது செய்யப்பட்டார்.  பாதிக்கப்பட்ட குழந்தை காவ்யாவை மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளதால் அந்நகர எஸ்.பி அபிமன்யூ சிங் தெரிவித்துள்ளார்.

UTTARPRADESH, MANKILLSBABY, BABYFLUNGFROMTERRACE, INFANT, VIOLENCE