BGM BNS Banner

லிஃப்டில் சென்ற மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற ஆபரேட்டர்!

Home > தமிழ் news
By |
லிஃப்டில் சென்ற மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற ஆபரேட்டர்!

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் அருகே உள்ள காட்டாங்குளத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் மாணவியை லிஃப்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மாணவி ஒருவர், தனது சக மாணவியை சந்திக்கும்பொருட்டு அந்த பல்கலைக் கழக விடுதிக்குட்பட்ட லிஃப்டினை பயன்படுத்தியுள்ளார்.  அப்போது லிஃப்டில் இருந்த ஆபரேட்டரும் அந்த விடுதி கேம்பஸின் ஊழியருமான நபர், அந்த மாணவியின் நனைந்த ஆடையினை பார்த்த சில நொடிகளில், அம்மாணவியின் எதிரிலேயே தகாத முறையில் லிஃடிலேயே நடந்துகொண்டுள்ளார்.

 

மேலும் அம்மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற அந்த ஊழியர்ரின் செயலால் அம்மாணவி அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டதும், பிற மாணவிகளும் ஓடிவந்து லிஃப்டின் டவுன் பட்டனை அழுத்தி அம்மாணவியை மீட்டதாகக் கூறப்படுகிறது.

 

இதனை அடுத்து பல்கலைக் கழக நிர்வாகத்தினரிடமும், விடுதிக் காப்பாளர்களிடமும் போலீசாரிடமும் புகார் அளித்த மாணவர்கள் லிஃப்ட் ஆபரேட்டர் உள்ளிட்ட இருவரை கைது செய்யக் கோரியும் தகுந்த தண்டனை அளிக்கக் கோரியும்- மாணவியின் ஆடை விஷயத்தில் தகாத கருத்தைச் சொல்லி, மாணவியின் புகாரை ஏற்றுக்கொள்ளாத விடுதிக் காப்பாளரை கண்டித்தும் நள்ளிரவில் போராட்டம் நடத்தியதை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட லிஃப்ட் ஆபரேட்டர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தோடு தொடர்புடைய மற்றுமொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SEXUALABUSE, COLLEGESTUDENT, TAMILNADU, CHENNAI, LIFTOPERATOR