எரிச்சலான ரசிகர்களால், ஃபுட்பால் மைதானத்தை நோக்கி பறந்த செருப்புகள்..காரணம் இதுதான்!

Home > தமிழ் news
By |

ஆசியக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின்போது மைதானத்தில் காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எரிச்சலான ரசிகர்களால், ஃபுட்பால் மைதானத்தை நோக்கி பறந்த செருப்புகள்..காரணம் இதுதான்!

ஆசியக்கோப்பை கால்பந்து தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்து முடிந்த முதல் அரையிறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி ஜப்பான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனைத் தொடர்ந்து கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையேயான 2 -ஆவது அரையிறுதிப் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. ஆரம்பம் முதலே ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த 37 -ஆவது நிமிடத்தில் கத்தார் அணி சார்பாக இரண்டாவது 2 -ஆவது கோல் அடிக்கப்பட்டது.

இதனை கொண்டாடும் விதமாக கத்தார் அணி வீரர்கள் பார்வையாளர்களைப் பார்த்து கத்தியுள்ளனர். இதனால் கோபமான ஐக்கிய அரபு அமீரக அணி ரசிகர்கள் கால்பந்தாட்ட மைதானத்தின் உள்ளே வாட்டர் பாட்டில்களையும், காலணிகளையும் வீசியுள்ளனர்.

இதனால் மைதானத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து ஆட்டம் இரண்டு முறை பாதிக்கப்பட்டது. இருப்பினும் கத்தார் அணி 4-0 என்கிற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

AFCASIANCUP, FOOTBALL, ASIANCUP2019