நெகிழவைக்கும் டிராஃபிக் போலீஸின் மனிதநேயம்: சல்யூட் அடித்த கிரிக்கெட் பிரபலம்!
Home > தமிழ் newsஹைதராபாத்தில் டிராஃபிக் போலீஸ் இருவர், திடீரென ஹார்ட் அட்டாக் வந்த இன்னொரு நபருக்கு, சமயோஜிதமாக செயல்பட்டு முதலுதவி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள பகதூர்புரம் அருகே, நடந்து வந்த ஒருவர் திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு விழுந்ததும் பொதுமக்கள் சிலர் பதறியடித்துக்கொண்டு அருகில் வரவும், அதற்குள் சமயோஜிதமாக செயல்பட்ட டிராஃபிக் போலீஸ்கள் சந்தன் மற்றும் இனாயதுல்லா இருவரும் அந்த நபருக்கு உடனடியாக CPR எனப்படும் ஹார்ட் அட்டாக் நோயாளிகளுக்கான முதலுதவியை செய்துள்ளனர்.
இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் பிரபலமான விவிஎஸ் லக்ஸ்மன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளதோடு, ‘இதுதான் மனிதநேயம் மற்றும் இத்தகைய மனித பண்புடையவர்களுக்கு சல்யூட்’ என்று பதிவிட்டிருக்கிறார்.
Presence of mind & humanity. May all be blessed with it. Constables K Chandan & Inayathulla from Bahadurpura, Traffic PS, saved the life of a heart attack patient in Hyderabad, by providing CPR. The desire to truly serve others is one of the greatest attributes of a human. Salute pic.twitter.com/1RZmERlYGm
— VVS Laxman (@VVSLaxman281) November 22, 2018