இன்றுடன் முடிக்கவில்லை என்றால் அபராதம்.. வருமான வரித்துறை அறிவுறுத்தல்!

Home > தமிழ் news
By |
இன்றுடன் முடிக்கவில்லை என்றால் அபராதம்.. வருமான வரித்துறை அறிவுறுத்தல்!

இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ், வருமான வரி கணக்கு கணக்கிடப்பட்டு சோதிக்கப்படுதல் மற்றும் அவற்றை வசூலித்தல் உள்ளிட்டவை வருமானவரித்துறையினரால் கண்காணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் நிதி அமைச்சக வருவாய்த்துறையின் நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் இயங்கும் இந்த துறைதான் வருமான வரியை வசூலிக்கிறது. இத்துறையின் அறிவுறுத்தலின்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக இன்றைய நாள் அறிவிக்கப்பட்டுள்ளது (ஆகஸ்டு 31, 2018).

 

வருமான வரி கணக்கை இன்றுடன் நிலுவை செய்து முடிக்கவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டி வரும் என்றும், வருவாய் ஈட்டும் அனைவருமே, அபராதமின்றி வருமான வரியினை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

INCOMETAX, REVENUEDEPERTMENT, INDIA