இ-சிகரெட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார்.

 

சிகரெட், பீடி ஆகியவற்றுக்கு மாற்றாக இ-சிகரெட் எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்தன. ஆனால் இந்தவகை சிகரெட்டுகளில் நிக்கோடினின் அளவு அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

 

இந்த நிலையில் மக்களின் உடல்நலன் கருதி தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை விதிப்பதாக, தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார். விரைவில் இந்த தடை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

BY MANJULA | JUN 14, 2018 5:35 PM #E-CIGARETTE #TAMILNADU #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS