தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளிடையே நடந்த கோஷ்டி மோதல்!

Home > தமிழ் news
By |
தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளிடையே நடந்த கோஷ்டி மோதல்!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை 12 மணி அளவில் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


யார் என்ன பேச வேண்டும், அவற்றையும் யார் பேச வேண்டும், கூட்டத்தினில் யார் கலந்துகொள்ள வேண்டும் என்பவை எல்லாம் முன்கூட்டியே முடிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், மற்ற உறுப்பினர்கள் உள்நுழைய முயற்சித்ததாலும், பேச முயற்சித்ததாலும் இந்த கோஷ்டி மோதல் உண்டானதாக கூறப்பாடுகிறது.


இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் முக்கிய தலைவர்களான திருநாவுக்கரசு மற்றும் ஈ.வி.கே.எஸ் ஆகிய இருவரின் ஆதரவளர்களுக்கு இடையே பெரும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.  நீண்ட நேரம் கோஷ்டி மோதல் சலசலப்புக்கு பிறகு மீண்டும் கூட்டம் தொடரப்பட்டதாக கூறப்படுகிறது.

CONGRESS, EVKS, THIRUNAVUKARASAR