முடியைக் குறைக்கும் சலூனில், மூளையை வளர்க்கும் லைப்ரரி.. அசத்தும் உரிமையாளர்!

Home > News Shots > தமிழ் news
By |

சலூன் கடைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து மீட்டெடுக்க தனது சலூன் கடையில் நூலகம் அமைத்து கவனம் ஈர்த்த கடை உரிமையாளர் இணையதளத்தில் வைரலாகி வருகிறார்.

முடியைக் குறைக்கும் சலூனில், மூளையை வளர்க்கும் லைப்ரரி.. அசத்தும் உரிமையாளர்!

முன்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்மாரியப்பன் என்பவர், தன் சலூன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், செல்போன்மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கியிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளார். இதனையடுத்து தனது வாடிக்கையாளர்களை இத்தகைய டெக்னாலஜியின் வலையிலிருந்து மீட்டுக் கொண்டுவர யோசித்துள்ளார் மாரியப்பன்.

அதன்படி படிக்கும் பழக்கத்தை அவர்களிடையே ஏற்படுத்த முடிவு செய்ததுடன், தனது சலூன் கடையிலேயே சிறிய வகை நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அத்துடன் தனது கடைக்கு வருபவர்கள் படிப்பதை உறுதி செய்துகொள்ள படித்ததில் பிடித்ததை எழுதுங்கள் என்று சொல்லி அவர்களை ஊக்குவிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

இதுபோன்ற முயற்சிகள் மூலம் நம்மிடம் படிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்க முடியும் என்றும், நேரத்தை உபயோகமாக பயன்படுத்திக் கொள்ளும் பழக்கமும் நம்மிடையே தொற்றிக்கொள்ளும் என்பதனாலும் மாரியப்பனின் இந்த செய்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

SALOON, LIBRARY, BOOKS