கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்.. இப்படி ஒரு காரணத்த கேட்ருக்கவே மாட்டீங்க!

Home > தமிழ் news
By |
கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்.. இப்படி ஒரு காரணத்த கேட்ருக்கவே மாட்டீங்க!

இன்றைக்கு பலரும் வாட்ஸாப்பில்தான் விழிக்கிறார்கள், உறங்குகிறார்கள். மனித வாழ்வோடு முக்கிய அங்கமாகிவிட்ட வாட்ஸாப்பை பலரால் தவிர்க்க முடிவதும் இல்லை என்பது இன்னொரு அதிர்ச்சியான விஷயம்.  அப்படித்தான் இங்கு ஒரு திருமணமே நிற்பதற்கு வாட்ஸாப் காரணமாக அமைந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் அம்ரோகா மாவட்டத்தில்,  இங்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக காலையில், உரோஜ் மெகந்தி - கோமர் ஹைதர் ஆகியோரின் இரு குடும்பத்துக்கும் நடக்கவிருந்த திருமண நாள் அன்று காலை கல்யாண பெண்ணின் வீட்டில் கல்யாண கலை இருந்தது.

 

எல்லாம் தயாராக இருந்த தருணத்தில் பெண் வீட்டார் எதிர்பார்த்தது போல், மணமகன் வீட்டார் வராததால் அனைவரும் பதற்றமடைந்து மாப்பிள்ளை வீட்டுக்கு போன் செய்ய, மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தச் சொல்லியும், ‘இந்த திருமணம் நடக்காது’ என்றும் கூறியுள்ளனர். அதற்கு மாப்பிள்ளை வீட்டார் சொன்ன பதிலால் நவீன கால இளைஞர், யுவதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, கல்யாண பெண் அதிக நேரத்தை வாய்ஸாப்பிலேயே கழிப்பதாகவும், அவர் ஒரு வாட்ஸாப் அடிக்ட் எனவும் கூறியுள்ளனர்.

 

ஆனால் வரதட்சணை கேட்டு கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்தியுள்ளதாகவும், அதற்கு நொண்டி சாக்காக இந்த காரணத்தை சொல்வதாகவும் மாப்பிள்ளை வீட்டார் மீது கல்யாண பெண்ணின் அப்பா புகார் அளித்துள்ளார்.  இதுபற்றி விசாரித்த அம்மாவட்ட காவல்துறை அதிகாரி விபின் தடா நிச்சயதார்த்துக்கு பிறகு அதிகமாக  வாட்ஸாப் பயன்படுத்தியதாக சிலர் மாப்பிள்ளைக்கு தகவல் அளித்துள்ளதால், மாப்பிள்ளை வீட்டார் சந்தேகப்பட்டு திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

WHATSAPPUPDATE, WHATSAPP, MARRIAGE, WEDDING, INDIA