'அவங்களே கூட ஓட்டு போடலாம்'.. முன்னாள் போட்டியாளர் காட்டம்!

Home > தமிழ் news
By |
'அவங்களே கூட ஓட்டு போடலாம்'.. முன்னாள் போட்டியாளர் காட்டம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டைவிட்டு ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்றே அனைவரும் நினைத்திருக்க, மாறாக ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதாக கமல் நேற்று அறிவித்தார்.

 

மேலும் கடந்த 12 வாரங்களில் இல்லாத விதமாக ஐஸுக்கு வந்த வாக்குகள் எண்ணிக்கையையும் அவர் போட்டுக் காண்பித்தார். இது பார்வையாளர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி நேர்மறையாக நடைபெறவில்லை என, அனைவரும் சமூக வலைதளங்களில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

இந்தநிலையில் நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி தனது டிவிட்டர் பக்கத்தில்,''பிக்பாஸ் டீமை வச்சி அவங்களே கூட ஓட்டு போடலாம். அது எல்லாமே கம்ப்யூட்டர் ஸ்கிரிப்ட் என்பதால் மிகத் திறமையாக கையாண்டிருக்கலாம். கண்டிப்பாக இந்த ஆதரவு பொதுமக்களிடம் இருந்து வந்தது அல்ல,'' என தெரிவித்துள்ளார்.