பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் எது தெரியுமா?: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Home > தமிழ் news
By |
பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் எது தெரியுமா?: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

பெண்களுக்கு ஆபத்தான இடம் எது என்கிற ஆய்வினை ஒரு புள்ளி விபர கணக்கெடுப்பின் முடிவுகளின்படி ஐ.நா அறிவித்துள்ளது. இந்த ஆய்வில் பொதுவாக பெண்கள் பற்றிய ஏகப்பட்ட உளவியல் குறிப்புகளும், இன்ன பிற விஷயங்களும் அடங்கியுள்ளன.


எனினும் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக கருதப்படுவது எந்த இடம் என்று, ஆய்வின் அடிப்படையிலும் தர்க்கபூர்வமாக நிறுவப்பட்ட உண்மைகளின் அடிப்படையிலும் கணக்கெடுக்கப்பட்டது. வேலைக்கு செல்லும் பெண்கள், பகுதி நேர-  இரவு நேர பணிகளுக்குச் செல்லும் பெண்கள்,  பகலில் ஆளில்லாத சாலைகளில் செல்லும் பெண்கள், இரவில் கூட்ட நடமாட்டம் இருக்கும் இடங்களில் நடந்து செல்லும் பெண்கள், டாக்ஸி அல்லது காரில் போகும்போது, பணிச்சூழலில், பொதுக்கழிப்பிடங்களில், உறவினர்கள் மத்தியில், நண்பர்கள் வீட்டில், வெளியூர் பயணிக்கும்போது, வெளியூரில் தங்கி வாழும்போது என ஏகப்பட்ட நிலத்திலும் பொழுதுகளிலும் பெண்களுக்கு உகந்த - கசப்பான - இனிமையான - கொடூரமான - ஆபத்தான - அரவணைப்பான - அன்புமிக்க இடங்கள் பல இருக்கின்றன.


ஆனால் உண்மையில், பெண்களுக்கு தங்கள் வீடுதான் மிகவும் ஆபத்தான இடம் என்று ஐ.நா-வின் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் கடந்த ஓராண்டு காலத்தில் கொலை-பலாத்காரம்- துன்புறுத்தல்-சீண்டல் உள்ளிட்டவை கொடுமைகளுக்கும் ஆபத்தான அச்சுறுத்தல்களுக்குன் ஆளான பெண்களில், சரிபாதி பெண்கள் தங்கள் கணவன் அல்லது குடும்ப உறுப்பினர்களாலேயே இந்த இன்னல்களுக்கும் ஆபத்துக்களுக்கும் ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி முடிவுகளை ஆய்வுக்குழு முன்வைத்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை ஐ.நாவின் போதைப்பொருள் மற்றும் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ளது. ஆகையினால் இந்த ஆய்வு முடிவுகளின்படி, பெண்களுக்கு வீடே மிக ஆபத்தான இடமாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

WOMEN, REPORT, SHOCKING, UNSTUDY, STATISTICS, MOSTDANGEROUSPLACE, VIRAL, GIRL, WORLD, HOME, HOUSE