சிலைக்கு ரூ.3000 கோடி ஓகே.. விளம்பரத்துக்கு ஆன செலவு மட்டும் இவ்வளவா?

Home > தமிழ் news
By |

குஜராத்தின் நர்மதா  நதி அருகே 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மத்திய அரசு மிக சமீபத்தில் உலகின் மிக உயரமான சிலையான வல்லபாய் படேலின் ‘ஒற்றுமைச் சிலை’யை அமைத்துள்ளது.

சிலைக்கு ரூ.3000 கோடி ஓகே.. விளம்பரத்துக்கு ஆன செலவு மட்டும் இவ்வளவா?

சுமார் 2,500 ஊழியர்களின் உழைப்பையும்,  ரூபாய் 2,989 கோடி பணச்செலவையும் முதலீடாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சிலையை திறப்பதற்காக எடுக்கப்பட்ட விழா செலவுகள் பலராலும் கண்டிக்கப்பட்டன. வறுமைக்கோட்டுக்கு கீழ் மக்கள் இருக்கும் இந்திய துணைக்கண்டத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு சிலை தேவைதானா என்பன போன்ற எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

ஆனால் கடும் எதிர்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் மத்தியில் இந்த சிலை மத்திய அரசால் எழுப்பப்பட்டதோடு, இந்த இடம் சுற்றுலாத் தளமாக மாற்றப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சர்தார் வல்லாபாய் படேலின் முழு உருவச் சிலையை பார்ப்பதற்கு ஹெலிகாப்டர் வசதிகளும் அவ்விடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில்தான், மும்பையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலரான ஜாதின் தேசாய் இதுகுறித்து எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் பதில் அளிக்கும் வகையில், படேல் சிலையை எழுப்பியதற்கான முழு உள்புற விளம்பரச் செலவை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. 

அதன்படி வெளிப்புறச் செலவுகள் தவிர்த்து, எலக்ட்ரானிக் மீடியா செய்யப்பட்ட டிஜிட்டல் விளம்பரங்களுக்கு  ரூ.2,62,48,463 என்றும் அச்சு ஊடகங்களில் அளிக்கப்பட்ட விளம்பர செலவுத் தொகை ரூ.1.68 லட்சம் என்றும், மொத்தமாக 2.64 கோடி ரூபாய் செலவானதாகவும் கணக்கு சொல்லி சிலையை விட பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PATELSTATUE, INDIA, SHOCKING, STATUE OF UNITY