'துப்பாக்கி', 'கத்தி' படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் 'சர்கார்' படத்தில் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.நடிகர் விஜய்யின்  44-வது பிறந்தநாளை முன்னிட்டு, 'சர்கார்'  படத்தின் தலைப்பு மற்றும் விஜய்யின் மூன்று லுக்குகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

 

இந்தநிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்தில் விஜய்க்காக தீம் மியூசிக் அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லாஸ் வேகாஸில் படம் பிடிக்கப்பட்டு வரும் காட்சிகளுக்காக ரஹ்மான் இந்த தீம் மியூசிக்கை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

முன்னதாக உதயா,அழகிய தமிழ்மகன், மெர்சல் படங்களில் விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்திருந்தாலும், அப்படங்களில் விஜய்க்காக தீம் மியூசிக் எதுவும் ரஹ்மான் அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS