Watch Video: எத்தனை வருடங்கள் ஆனாலும்..மறக்க முடியுமா இந்த நாளை?

Home > தமிழ் news
By |
Watch Video: எத்தனை வருடங்கள் ஆனாலும்..மறக்க முடியுமா இந்த நாளை?

இந்தியர்கள் இந்த நாளை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.டி20 உலக கோப்பை போட்டியில் யுவ்ராஜ் சிங் தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் தெறிக்க விட்டு இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைகிறது.

 

டி20 கிரிக்கெட் என்றாலே அதிரடிக்கு பஞ்சம் இருக்காது.வீரர்கள் சிக்ஸர்களையும்,  பவுண்ட்ரிகளையும்  அசால்ட்டாக பறக்கவிடுவார்கள். வேகப்பந்தோ,சுழல்பந்தோ என்பதெல்லாம்  முக்கியம் இல்லை. பேட்டிங் என்று வந்துவிட்டால் வீரர்கள் அனைவரும் எப்படியாவது ஒரு சிக்ஸரையாவது விளாசிட வேண்டும் என்று தான் களத்தில் இறங்குவார்கள்.

 

செப்டம்பர் 20, 2007 ஆம் ஆண்டில் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. அரை இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்தியா இந்த போட்டியில் நல்ல ரன்ரேட்டுன் வெற்றிபெற்றே  ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.19 வது ஓவர் தொடங்கும் முன் ஃபிளின்டாஃப், யுவ்ராஜ் சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கோபமடைந்த யுவ்ராஜ் சிங், ஃபிளின்டாஃபிடம் பேட் எடுத்து சென்று பேசினார்.

 

இந்நிலையில்  19வது ஓவரை இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசினார். அதை களத்தில் நின்ற யுவ்ராஜ் சிங் தொடர்ச்சியாக 6 பந்துகளையும்,  6 சிக்ஸர்களாக விளாசி மிரட்டினார்.டி20 போன்ற குறைந்த பட்ச ஓவரில் தொடர்ச்சியாக 6 பந்துகளையும் 6 சிக்ஸர்கள் அடிக்க முடியமா? என்ற கேள்விக்கு, இந்தியாவின்  அதிரடி  ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் தனது பேட்டால் பதிலளித்தார்.